19-9-2019 வியாழக்கிழமை கிருத்திகை விரதம்

கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த தினம் என்பதால் இன்றைய பொழுதை முருகனை வழிபட்டு வாழ்க்கையில் சிறப்பு அடைய வேண்டும்.கார்த்திகை தீபத்திலே அழகு முருகன் அவன் -சிரிக்கின்றான் தாமரை மலரில் பூத்த மோகன முகத்தவன்- மிளிர்கின்றான்
உமையவளின் மடியிலே தவழ்கின்ற மழலையாக -மலர்கின்றான்
ஈசன் பெற்ற ஆசை மைந்தன் அவன் -இனிக்கின்றான்.
குன்று இருக்கும் இடத்திலே குடிகொண்ட  குருபரன் அருள்கின்றான்.
நம் அனைவரும் அவன் புகழ் பாடும் தருணமே கார்த்திகை சிறப்புமிக்க இந்த நன்னாளில்
இரண்டு மணி நேரம் மனம் முழுதும் இறைவனை நினைத்து மவுனமாக இருந்து வழிபட்டால் விரதம் அடைந்த பலன் கிடைக்கும்.
மௌனம் கடைபிடித்தால் சிறப்புகள்..
சிறப்பு-1  மனதில் மிகப் பெரிய பலம் கிடைக்கும்.
‌ சிறப்பு-2 ‌ மனதிற்கு தெளிவு தரும்
சிறப்பு-3 ‌ உடல் பிணி அகலும்
சிறப்பு -4 ‌ புதிய தெம்பு பிறக்கும் சிறப்பு -5 ‌துன்பத்திற்கு தீர்வு கிடைக்கும்
சிறப்பு -6 ‌ வாழ்வதற்கான வழி பிறக்கும்
முருகனின் கோவில் தனில்
நான் சென்று- நின்முகம்
நான் கண்டு -நின் பாதம்
நான் பணிந்து -கோவிலை
வலம் வந்து -மௌனமாய்
நான் அமர்ந்து -கண்களை மூடுகின்றேன் -முருகையா
நின் முகம் -அகம்தனிலே
தெரிய கண்டு -கண்களில்
கண்ணீர் பெருக -கண்முன்னே
நின் முகம் -தெரியுதய்யா
அந்த பேரின்பம் நான் காண அவ்வின்பம் -இவ்வையகமே பெற்றிடவே அருள்வாயே முருகா முருகையா -கந்தா -கடம்பா கதிர்வேலா -சரணம் சரணமய்யா.
நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று அனைத்து துன்பமும் நீங்கி முருகனின் அருள் பெற்று வளமோடு வாழ்வோம்.

Comments

Popular posts from this blog

The most important fasting days to follow in life ..

Advice for the children

Pradosham for Shivan