தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா- உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா !பெண் முன்னேற்றம எல்லாம் வெறும் பேச்சோடுதானா.. பழம் பாட்டோடுதானா வெறும் ஏட்டோடுதானா ! என பெருமூச்சோடு புலம்பி கொண்டிருக்கும் பெண்களின் மத்தியில் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அரசியல் ட்ரென்டாக  இப்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பாஜக கட்சிக்காக  தான் உழைத்த உழைப்புக்கு எல்லாம் கைமேல் பலன் கிடைத்துள்ளது .தெலுங்கானா கவர்னராக எட்டாம் தேதி பதவி ஏற்கின்றார் திருமதி தமிழிசை சௌந்தரராஜன்.



 பாஜக தலைவராக கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இருந்து வருகின்றார் .அன்றுமுதல் முழுமூச்சாக பாஜாக கட்சிக்காக அரசியலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார் . கட்சி விட்டு கட்சி தாவுவது என்பது அரசியலின் வழக்கம்  என்றாலும் அனைத்திற்கும் விதிவிலக்காக இருந்தவர்தான் தமிழிசை சௌந்தரராஜன். பரிகாசம் பாராட்டுதல் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் பாஜகவின் கட்சிக்காக அனைத்தையும் சமாளித்து இன்று கவர்னர் எனும் அங்கீகாரத்தை பெறுகின்றார். என்பது மகிழ்ச்சி கொள்ள வேண்டிய ஒரு விஷயம்தான்.

மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி ஒரு அறிக்கையை அறிவித்தது தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மத்திய அரசு நியமித்துள்ளது .அனைத்து கட்சி தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் முதல்வர்களும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முக்கிய தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கு கொள்ள உள்ளதாக தெரிகின்றது.

வாழ்க்கையில் மலையளவு சோதனை வந்தாலும் கடுகளவாக நினைத்து அனைத்தையும் முறியடித்து சாதிப்பது -என்பது பெண்களுக்கு கை வந்த கலையன்றோ !  என ஆண்பாலரும்  சற்றே வாய்விட்டுத்தான்  பெண் சமுதாயத்தை வாழ்த்துங்களேன்.

Comments

Popular posts from this blog

We need to prepare for the first day of Deepavali

வெளியூரில் வேலை பார்க்கும் அனைவருக்கும் இந்த தீபாவளி தித்திக்கும் தீபாவளி

ஆபரண விலை தங்கம் விலை உயர்வு