ஆபரண விலை தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 1கிராம் 3579 ரூபாய் அளவில் தற்போதைய நிலவரம் சவரனுக்கு ரூபாய் 28,632 விற்கப்படுகின்றது.
ஆனாலும் பெண்கள் மிகவும் விரும்பி அணிகலனை   வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
உடலை அலங்கரிக்க ஆபரணம் விரும்பாத பெண்கள் ஏது! காதுக்கு இனிய கம்மலோ ஜொலி ஜொலிக்க -மூக்குத்தி  மின் மின்னலென பளபளக்க - கழுத்திலே கலர்கலராக நெக்லஸ்  கண்கவர- பதக்கங்கள் பலவிதமாய் மார்பினிலே ஊஞ்சலாட- வண்ண வண்ண தங்க வளையல்களோ சலசலக்க -கண்ணாடி முன் நின்று தன் அழகில் மதிமயங்கி நின்றுவிட்டால் -வேலை என்பதேது! செய்வதுதான் ஏது!  ஆடவரின்  பாக்கெட்டை காலி செய்து செய்வது ஆபரணத்தின் வேலை அன்றோ!
இருந்தாலும் கட்டிய மனைவி சிரித்துவிட்டால்  மயங்காத கணவர்தான் ஏது! செலவை நினைத்து கவலைப்பட்டால் வாழ்வதேது!
என அறிந்து தான் எந்த விலையில் நான் ஜொலித்தாலும்  எம்மை நாடி வந்துதானே ஆகவேண்டும் -என்று கம்பீரமாக சர்வதேச அளவில் ட்ரெண்டிங்காக ஆபரணத்தின் விலை உச்சகட்டத்தில் இருக்கின்றது.
அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகம் ரூபாய் மதிப்பு சரிவு சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு -அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது
புன்னகையே பொன்னகை என்பதை மனதில் கொண்டு -கடன் இல்லா வாழ்வு வாழ்ந்து -சிறுக கட்டி பெருக வாழ்ந்து - நேர்வழியில் உழைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டு அதன் பின்னே -பெருகி வந்த பணத்தினிலே  ஆபரணம் வாங்கி அழகு பாருங்கள்.குடும்பம் சிறப்பாகும் .வாழ்க்கையும் மகிழ்ச்சியாக  அமையும்.
என்பதை புரிந்து கொண்டால் வாழ்க்கை இனிமையாக அமையும் அன்றோ!

Comments

Popular posts from this blog

We need to prepare for the first day of Deepavali

வெளியூரில் வேலை பார்க்கும் அனைவருக்கும் இந்த தீபாவளி தித்திக்கும் தீபாவளி