நவீன கால காக்கைகள் -கனிய போகும் மழலைகள்-ஆரோக்கியமான உணவு டிப்ஸ்


 இரவு தனிலே ஒரு கை சாதம் எடுத்து நீர் ஊற்றி மறுநாள் விடியலில் அந்த சாதத்தை காக்கைக்கு வைத்தால் நம்முடைய வாழ்நாள் முழுவதும் பொருட்செல்வம் பெருகிக்கொண்டே இருக்குமே தவிர ஒரு பொழுதும் குறையாது -என பெரியவர்கள் சொல்லக் கேட்டு அதேபோன்று நீர் ஊற்றிய பழஞ்சோறு தனில் ஒரு கைப்பிடி எடுத்து மறுநாள் விடியலில் சாதம் கொண்டுசென்று நான் வைக்க அடுத்த நிமிடமே தன் சகாக்களை அழைத்துக்கொண்டு ஓடி வந்த காக்கை கூட்டமோ -உண்ணும் அழகை கண்டு ரசிப்பதற்கு நானோ காத்துக்கொண்டிருக்க "பழம் சாதம் பிடிக்கவில்லையாம் காக்கைக்கு எங்களைப்போல் பீட்சா -கட்லெட் பர்க்கர் வைத்தால்தான் சாப்பிடும் என்றாள்- எங்கள் வீட்டு சுட்டிப்பெண். உண்மைதான் வைத்த சாதம் அப்படியே இருக்கின்றது ..பக்கத்து வீட்டிலோ இரவு மீதமென வைத்த பர்கருக்கு மவுசு மிக மிக அதிகமே அனைத்து காகமும் அவ்விடத்திலே ..அதிலே ஒரு காகமோ‌ எமை பார்த்து முறைப்பது ஏனோ! பழம் சாதமா வைக்கின்றாய்! அமாவாசை அன்று கூப்பிடுவாய்.. அன்று காட்டுகின்றேன் என் வேலையை..' என்று பர்கரை சுவைத்துக்கொண்டே எமைப் பார்த்து முறைக்க.. சகாக்கள் அனைத்தும் ஒருசேர தலையாட்ட -இது என்ன வம்பாப் போச்சு ! இனி வீட்டிலே பீட்சாவும் பர்கரும் வாங்கும்போது-ஆளுக்கொரு பர்கர் என்றால் எண்ணிக்கையில் இரண்டு கூடுதல் வாங்குவது அவசியம் ..என நான் மட்டுமல்ல நீங்களும் உணரத்தான் வேண்டும்.
நவீன கால காக்கைகள் போன்று கனிய போகும் மழலைகளின் மனநிலையும் இப்படித்தான் இருக்கின்றது. இதற்கு தீர்வுதான் என்ன!

 பழஞ்சோறு -கேவுர்அடை -கம்பு பணியாரம் -திணை வடை- மணிலா உருண்டை என அறுசுவை உணவு அலுக்காது கதை சொல்லி ஊட்டி வளர்த்த நம் பாட்டி எங்கே !இ ன்று தொலைக்காட்சியில் கார்ட்டூன் படம் முழுக்க சிந்தையிலே ஆழ்ந்திருக்க எண்ணெயில் பொரித்தெடுத்து சிப்ஸ் வகைகளை கொரித்து கொண்டே பார்க்கின்ற குழந்தைகளின் எதிர்கால உடல் ஆரோக்கியம் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது..

சுவை கொண்ட ஆரோக்கிய உணவுகள் அருமையை புரிந்துகொள்ள .. பழஞ்சோறு சிறுவெங்காயம் சுவைதனிலே ஒரு உணவு

 கேவுர் மாவு -சின்னவெங்காயம் பச்சைமிளகாய் -ஒருபிடி முருங்கைக்கீரை -ஜீரணத்துக்கு பெருஞ்சீரகப்பொடி- ஒரு சிட்டிகை சர்க்கரை -உப்பு சேர்த்து பிசைந்து உருண்டையை தோசைக்கல்லில் நெய்விட்டு சுடுகின்ற கேவுர் அடை. 

தினைஅரிசி ஒரு கப் -பச்சைப்பயிறு ஊறவைத்து- வெங்காயம் -பச்சை மிளகாய் -இஞ்சி -கறிவேப்பிலை என அனைத்தும் கலந்து பொரித்தெடுத்த தினை வடை .

கம்புமாவு -வெல்லம்- ஏலப்பொடி -தேங்காய் பல் போன்று சீவி - முந்திரி பருப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கரைத்து பணியார குழியில் இட்டு நெய்விட்டு சுடுகின்ற கம்பு பணியாரம் வாழைப்பழம் சர்க்கரை பால் சேர்த்து அரைத்து கோதுமை மாவில் உப்பு சேர்த்து கலந்து இட்ட சுவைமிகுந்த சத்து மிகுந்த வாழைப்பழ சப்பாத்தி அனைத்து பச்சை காய்கறிகள் கலந்து தயிர் -கொத்துமல்லி -உப்பு என சேர்த்து சுவைக்கு பொரித்தெடுத்து சேர்த்தபன்னீர் காய்கறி சாலட் என பலவகை உண்டு அன்றோ ஆரோக்கியம் உணவுகள்..

வளரும் தலைமுறை  சிறப்பாக ஆரோக்கியம் என்றும் நிலையாக
அறிவு கூர்மையில் பலமாக
இளமை என்றும் அழகாக
வாழ்க்கையில் வெற்றி நடை போட்டு வாழ்வதை கண்டு ஆனந்தம் அடைவது நாம் அன்றோ !

 அதற்கு பெற்றோரின் முழு கவனமும் குழந்தையிலிருந்து வளர்க்கின்ற முறையில் தான் இருக்கின்றது என்பதை அறிந்து குழந்தைகளுக்கு ஊட்டம் நிறைந்த பொருட்கள் சேர்த்து கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஆரோக்கியமான குழந்தையாக வாழ்வதற்கு வழி வகுப்போம்.

Copy rights at balakshitha

Comments

Popular posts from this blog

Speciality of Kandha sasti

favourite street food in Tamil Nadu

We need to prepare for the first day of Deepavali