வெளியூரில் வேலை பார்க்கும் அனைவருக்கும் இந்த தீபாவளி தித்திக்கும் தீபாவளி




தித்திக்கும் தீபாவளி குடும்பத்தில் ஒரு அங்கமாக அனைவரின் மனதிலும் நான் நிறைந்து- அனைவரையும் என் உயிருக்குள் பூட்டிவைத்து- குடும்ப பாரத்தை நான் சுமந்து - பட்ட கடனை அடைப்பதற்கு அல்லது இனி துன்பம் இல்லாமல் வாழ்வதற்கு - பணத்தின் அவசியத்தை புரிந்து கொண்டு அவர்களுக்காக நான் சிரமம் கொண்டாலும் நம் கடமையை இனிதே செய்கிறேன் -என நிறைவு கொண்டு எப்போது நம் குடும்பத்தை பார்ப்போம் எனும் ஏக்கத்தை மறைத்துக்கொண்டு போனில் அவர்களுக்கு தைரியம் கொடுத்து மகிழ்ச்சியோடு பேசுவது போல் நடித்து விட்டு -பின்னால் வழிகின்ற கண்ணீரை துடைத்துக் கொண்டு - தியாக நெஞ்சம் கொண்ட  மண்ணின்  பூவாசங்கள்  தென்னிந்தியாவில் மிக அதிகம். 

வெளியூரிலே வாழ்கின்ற அனைவருக்கும் இனிய செய்தி..



வருகின்ற 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி . அதற்கு முன்பாக 8 சிறப்பு ரயில்கள் அல்லது அதற்கும் மேலாக சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம் என சென்ட்ரல் ரயில் நிலையம் முடிவெடுத்துள்ளது என ரயில்வே அதிகாரி கூறுகின்றார் .பின்னர் முறையான அறிவிப்பு சொல்லப்படும். தீபாவளி கொண்டாடுவதற்கு தங்களது ஊருக்கு செல்ல விரும்புவோர் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். 

எண்ணெய் தேய்த்து நீராடி -புத்தாடை அணிந்து -பட்சணங்கள் வாசத்திலே தாயின் மடி மீது தலை வைத்து தந்தையிடம் நண்பனாய் கைகோர்த்து இனிப்பு முறுக்கு என விதவிதமாய் தான் சுவைத்து - தம்பி தங்கையோடு ஓடிப்பிடித்து விளையாடி பட்டாசு மத்தாப்பு ஒலித்தாக - தித்திக்கும் தீபாவளியை இனிதாக மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.

Comments

Popular posts from this blog

The most important fasting days to follow in life ..

Advice for the children