நாட் கிழமைகளில் வெள்ளிக்கிழமைகளில் நாம் நடந்துகொள்ளும் வேண்டிய வழிமுறைகள்



வெள்ளிகிழமைகளிநடந்துகொள்ளும் வழிமுறைகள்..
வெள்ளிக்கிழமை தெய்வத்திற்கு உகந்த நாள் இந்த நாளில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் .அந்த காலத்துல பாட்டி நமக்கு நிறைய அட்வைஸ் பண்ணுவாங்க.. நாள் கிழமை வந்தால் வாசலில் தலை முடியை பறக்க விட்டுண்டு  நிக்காதே.. மணி 5 ஆகப் போகுது முகத்தை அலம்பிண்டு பொட்டு வச்சுண்டு   முதல்ல போய் விளக்கேத்து.. அழகா லட்சணமா இருக்கே- தலையில கொஞ்சம் பூ வச்சுண்டு  வேலைய பாரு -என நிறைய அட்வைஸ் பண்ணுவாங்க நாமும் பாட்டி சொல்வதை கேட்டு அதன்படி நடப்போம் ..


ஆனா இப்போ நாம எல்லோரும் வேலைக்கு போறோம் .கையில் செல்போன் இருந்தா நேரம் போறதே தெரியாம பேசிண்டு இருக்கோம். நம்ம பொண்ணுங்களுக்கு நாம சொல்லிக் கொடுப்பதற்கே நேரம் பத்த மாட்டேங்குது -கல்யாணம் ஆகப் போற பொண்ணுங்க, கல்யாணம் ஆகி மாமியார் வீட்டில் குடும்பம் நடத்தும் பொண்ணுங்க -தனியாக கணவரோடு குடும்பம் நடத்தும் பெண்கள், எல்லோருக்கும் இந்த டிப்ஸ் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் .


ஸ்நானம் செய்யும் முறை வழக்கம்போல எப்பொழுதுமே லேட்டாகத்தான் எழுந்திடுவோம் வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்து ஸ்நானம் செய்யற பழக்கத்தை நாம் கொண்டு வரணும் .ஸ்நானம் செய்யும் பொழுது ஒரு குவளை ஜலம் எடுத்து ஓம்' எனும் எழுத்தை மோதிர விரலால் எழுதி- நாம குளிக்கும் தண்ணீரை கங்கை ஜலமாக நெனச்சு  தலையில ஸ்நானம் செய்யும் போது ரொம்ப விசேஷத்தை தரும் .அப்படி செய்யும்போது அந்த ஜலமானது கங்கை நீராகவே மாறிவிடும் ..அதுல நாம் ஸ்நானம் செய்யும்போது நம்ம உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் நம்ம மனசும் எந்தவித தீய நோக்கத்திற்கும் செல்லாமல் மனமானது புனிதமாக மாறுகின்றது.
நோய் நொடியில் இருந்து காக்கும் சக்தி புனிதமான கங்கை நீருக்கு உண்டு.. நம்மிடம் இருக்கும் தோஷங்கள் நீங்கி வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு இந்த ஸ்நானம் மிகுந்த பயனை அளிக்கும். அதனால நாம்  ஸ்நானம் செய்யும் பொழுது இந்த முறையை பின்பற்றி
எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து
கொள்ளலாம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

The most important fasting days to follow in life ..

வெளியூரில் வேலை பார்க்கும் அனைவருக்கும் இந்த தீபாவளி தித்திக்கும் தீபாவளி

Advice for the children