15 11 2019 வெள்ளிக்கிழமை இந்த வாரத்திற்கான விசேஷமான தினங்கள்

15-112019 வெள்ளிக்கிழமை
 சங்கடகர சதுர்த்தி  விநாயகப் பெருமானுக்கு உகந்த தினம் .

எந்த காரியத்தை தொடங்கினாலும் விநாயகரை வணங்கி தொடங்கில் ஜெயமாகும் .யானை முகத்தவனை நம்பினால் ஒரு குறையும் வராது என்று நம்பிக்கையோடு சங்கடகர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வழிபடலாம் திருமண தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். 

அன்றைய தினம் அருகம்புல் மாலையை விநாயகருக்கு சாற்றினால் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி மிகுந்த இனிய வாழ்க்கை தருவார் விநாயகப்பெருமான்.  

17-11-2019 ஞாயிற்றுக்கிழமை தமிழ் மாதமான கார்த்திகை ஒன்றாம் தேதி -கார்த்திகை மாதத்திற்கு உள்ள சிறப்பு -இந்த மாதம் திருமணம் கைகூடும் மாதம் என்பதால் ஆவலோடு எதிர்பார்க்கும் அனைவருக்கும் நல்ல வரன் தேடி வரும் சிறப்பான மாதம். 

கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை சித்தயோகம் 60 நாழிகை பஞ்சமி திதி யோடு சுப நாளும் சேர்ந்து வருவதால் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் நவகிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தும் விலகி -சுப செய்திகள் தேடிவரும்.


 18-11-2019 திங்கட்கிழமை அன்று சோமவாரம்- கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சோமவாரம்- சிவபெருமானுக்காக வழிபடும் ஒரு தினம் -இந்த தினங்களில் விரதம் இருப்போர்க்கு வேண்டிய வரம் கிடைக்கக்கூடிய சக்திவாய்ந்த தினம் இந்த சோமவாரம்.

 இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திங்கட்கிழமை களிலும் வினைகள் அனைத்தும் விலககூடிய -வில்வ இலைகள் சிவனுக்கு அர்ச்சனைக்கு கொடுத்து அன்றைய தினத்திலே வழிபட்டால் முன்ஜென்ம வினைகளால் ஏற்படக்கூடிய துன்பங்கள் அனைத்தும் விலகி மகிழ்ச்சி உண்டாகும். கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுவதற்கு விரதம் இருப்பதற்கு ஆரம்பிப்பார்கள் .

18-11-2019 திங்கட்கிழமை சோமவார நாளான அன்று -சஷ்டியும் சேர்ந்து வருவதால் முருகப் பெருமானையும் வழிபட்டு சிறப்பை அடையலாம். 

கார்த்திகை மாத சோம வாரத்தில் சிறப்பு.. 

 ஆயிரம் சுழற்சிகள் அடங்கிய மனதை ஐந்து நிமிடம் கட்டிப்போட்டு' ஓம் நமச்சிவாய' என ஓதுகின்ற போதினிலே பஞ்சபூதங்களையும் கட்டியாளும் சிவனேசன் -சற்றே விதி பயனை மாற்றி -சிந்தை குளிர வைப்பானே.


Comments

Popular posts from this blog

We need to prepare for the first day of Deepavali

வெளியூரில் வேலை பார்க்கும் அனைவருக்கும் இந்த தீபாவளி தித்திக்கும் தீபாவளி

ஆபரண விலை தங்கம் விலை உயர்வு