8-11-2019 இந்த வாரத்திற்கான விரத தினங்கள்

8--11 -2019 வெள்ளிக்கிழமை முதல் இந்த வாரம் முழுவதும் வரக்கூடிய விசேஷ தினங்கள்..

9-11-2019 சனிக்கிழமைஅன்று சனி பிரதோஷம்

12-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று பௌர்ணமி

13-112019 புதன்கிழமை அன்று கிருத்திகை



 நவம்பர் 9ஆம் தேதி
சனிக்கிழமை -சனி பிரதோஷம் சிவனுக்கான வழிபாடு -ஓம் சிவாய நமஹ எனும் மந்திரத்தை நாள்முழுதும் சொல்லியபடி விரதம் இருக்கக் கூடிய அற்புதமான தினம் சனிப்பிரதோஷம் .சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷம் மிக மிக சக்திவாய்ந்த பிரதோஷம் ஆகும்.

அன்றைய தினத்தில் ஓம் சிவாய நமஹ எனும் நாமத்தை உச்சரிப்பது

 சிவபெருமானின் அபிஷேகத்திற்கு நம்மால் முடிந்த பால்- இளநீர் -தேன் கரும்புச்சாறு- சந்தனம் என வாங்கி கொடுக்கலாம் .

அர்ச்சனைக்கு வில்வ இலை வாங்கி கொடுப்பது -நெய் விளக்கு ஏற்றுவது அருகம்புல் மாலை வில்வ மாலை நந்தீஸ்வரருக்கு சாற்றுவது -பச்சரிசி வெல்லம் கலந்த இனிப்பு அனைவருக்கும் கொடுப்பது- இவை நாம் அன்றையதினம் செய்யக்கூடிய செயல்கள் .

அன்றைய தினத்தில் கோவிலுக்கு அவசியம் சென்று நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கிடையே சிவலிங்கத்தை தரிசிப்பது - மூன்று ஜென்ம பாவம் தீரும்.

 நம்முடைய மனதில் இருக்கும் குழப்பங்கள் தீர்ந்து நல்ல நேரம் பிறப்பதற்கு சிவபெருமானை அனுஷ்டிக்கும் அற்புதமான நாளே சனி பிரதோஷம் .


நவம்பர் -12 செவ்வாய் கிழமை பௌர்ணமி
ஐப்பசி மாதம் வரக்கூடிய பவுர்ணமி. பவுர்ணமி அன்று அம்பாளுக்கு விரதம் இருந்த பலனை பெறக்கூடிய நாள் .ஆனால் இந்த ஐப்பசி மாதம் வரக்கூடிய பவுர்ணமியோ சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து அந்த அழகை கண்கொள்ளாக் காட்சி யை கண்டுகளித்து தரிசிக்கும் மிக சிறந்த நாள் .

வருடத்திற்கு ஒரு முறை சிவனுக்கு மகா அன்னாபிஷேகம். இந்த நாளில் நாம் அன்னதானம் செய்தால் அளவில்லாத செல்வம் கிடைத்து அச்செல்வம் என்றும் வாழ்க்கையில் நிலைத்து நிற்கும் .


13-ஆம் தேதி புதன்கிழமை கிருத்திகை

 கிருத்திகை நாள் திருமணமாகாத பெண்கள்- குழந்தை வரம் வேண்டும் என நினைக்கும் பெண்கள் அனைவருமே முக்கியமாக விரதம் இருந்தால் -அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.

 காலையில் இருந்து உணவு எடுத்துக்கொள்ளாமல் ஜூஸ் பால் பழம் என எடுத்துக்கொண்டு முருகப்பெருமானுக்கு வாழை இலைபோட்டு படைத்து -அந்த இலையில் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம் .கந்த சஷ்டி கவசம் புத்தகம் படிப்பது மிக சிறந்தது.

 நேரமிருந்தால் பவுர்ணமி அன்று மகா அன்னாபிஷேமே -
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சென்று தரிசித்து வரலாம்


Comments

Popular posts from this blog

The most important fasting days to follow in life ..

Advice for the children

Pradosham for Shivan