மழலை சொல் கேளீரோ

புதிய ஜனனம் சூரியோதயம் பிறந்தது - விடியல் பிறந்தது மலர்மலர்ந்ததோ  -புதிதாக எனை காண  - குரல்கள் சுற்றிலும் சூழ புதிதாக ஜனனம் எடுத்தேனோ! கீச்சென்ற என் குரல் பூமிதனில் ஒலிக்கையிலே - உலகம் எனக்காகவே இப்போதுதான் பிறந்ததோ!

 என் வரவை எதிர்பார்த்து அனைவரும் ஆனந்தமாய் வரவேற்க -யான் என்ன தவம் செய்தேனோ !குதூகலம் என்னுள் பொங்கிடவே பிஞ்சு கைகள் கால்களும் சிலம்பாட - கீச்சென்று நானோ குரல் எழுப்ப அணைத்த கைகள் தாயின் கைகள் அன்றோ! இதமான சூடு -இன்பமான அரவணைப்புக்குள்  நான் சிக்குண்டேன் சிக்குண்டேன் என் தாயே -என்ன தவம் செய்தேனோ!


உன் வயிற்றில் மழலை என உதித்ததற்கு  நன்றி சொன்னேன் இறைவனுக்கு காலமெல்லாம்.. இந்த அன்பும் அரவணைப்பும் என்னுள் என்றென்றும் வேண்டும் என் தாயே - என்னுள் நீயும் உன்னுள் நானும் என இனிதே கலந்துவிட்டேன் என் தாயே!

 என்னையே அறியாத வருடுகின்றேன் என் தாயின் கன்னத்திலே ..இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ!

 Copy rights at balakshitha

Comments

Popular posts from this blog

The most important fasting days to follow in life ..

Advice for the children

Pradosham for Shivan