தனுஷ் பிறந்தநாள்

 நடிகர் தனுஷ் அவர்களுக்கு பிறந்தநாள் இன்று



 28 ஜூலை மாதம்1983  சிறு துளியாக பிறந்து பெரு துளியாக திரையுலகில் இன்று சாதனை புரிந்து வரும் ‌நடிகர் தனுஷ் அவர்களை ' என்றும் வாழ்க வளமுடன் 'என்று வாழ்த்துவோம்.


'தோன்றின் புகழோடு தோன்றுக' சொல்லுக்கு பொருத்தமானவர் தனுஷ்.

 

மனிதனாய் பிறந்து  திரையுலகில் சாதித்து, சோதனை வந்தாலும் தகர்த்தெறிந்து, விடாது முயற்சி செய்து, புகழ் பெற்று வாழ்தலின் இன்பம் கண்டவர் தனுஷ்.


திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குனர் ,என தன்னுடைய ‌ சகலகலா முத்திரையை திரை உலகில் மிக அழகாக பதித்தவர் நடிகர் தனுஷ்.


 நடிப்புத் திறமையால்  ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் மட்டுமன்றி ராஞ்சனா எனும் இந்தி படத்திலும் நடித்து புகழ் பெற்றவர்.



நடிகர் ரஜினி லதா தம்பதியரின் மகள் ஐஸ்வர்யா மணந்து மணவாழ்க்கையில் மகிழ்ச்சி கண்டவர். யாத்ரா , லிங்கா  இரு பிள்ளைகள் என  பாசப்பிணைப்பு மிக்க  மிக அழகிய குடும்பத்தின் தலைவனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.


பல சர்வதேச விருதுகளை மட்டுமன்றி

சினிமா துறையில்  பல  விருதுகளும் குவித்து புகழ் ஏணியின் உச்சியில் கொடிகட்டி பறப்பவர் நடிகர் தனுஷ்.


 2002 முதல் 2021 வரை மேலும்  தமிழ் திரையுலகில்  நடிப்பில் புகழ் பெற்ற சிறந்த நடிகரான தனுஷ் அவர்களின் பிறந்த நாளை ரசிகர்கள் மிக மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.


மேலே காணும்  மிக அருமையான தனுஷின்  ராஜ வம்சத்து கெட்டப்பில் உள்ள புகைப்படத்தை தங்களுடைய Dp படமாக வைத்து கொண்டாடுகின்றனர் ரசிகர்கள்.

சிந்தனை கீற்றில்  சிதறாத மணித்துளி போல் என்றும் தன்னுடைய புகழைத் தக்க வைத்திருக்கும் நடிகர் தனுஷ் அவர்கள்

 நீண்ட காலம் திரை உலகில் சாதனை புரிந்து நீடூழி வாழவேண்டும் என்று நாமும் மனமாற வாழ்த்துவோம்.


Copy rights at Balakshitha

Comments

Popular posts from this blog

Speciality of Kandha sasti

We need to prepare for the first day of Deepavali

Advice for the children