Posts

Showing posts from October, 2019

நாட் கிழமைகளில் வெள்ளிக்கிழமைகளில் நாம் நடந்துகொள்ளும் வேண்டிய வழிமுறைகள்

Image
வெள்ளிகிழமைகளி நடந்துகொள்ளும் வழிமுறைகள்.. வெள்ளிக்கிழமை தெய்வத்திற்கு உகந்த நாள் இந்த நாளில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் .அந்த காலத்துல பாட்டி நமக்கு நிறைய அட்வைஸ் பண்ணுவாங்க.. நாள் கிழமை வந்தால் வாசலில் தலை முடியை பறக்க விட்டுண்டு  நிக்காதே.. மணி 5 ஆகப் போகுது முகத்தை அலம்பிண்டு பொட்டு வச்சுண்டு   முதல்ல போய் விளக்கேத்து.. அழகா லட்சணமா இருக்கே- தலையில கொஞ்சம் பூ வச்சுண்டு  வேலைய பாரு -என நிறைய அட்வைஸ் பண்ணுவாங்க நாமும் பாட்டி சொல்வதை கேட்டு அதன்படி நடப்போம் .. ஆனா இப்போ நாம எல்லோரும் வேலைக்கு போறோம் .கையில் செல்போன் இருந்தா நேரம் போறதே தெரியாம பேசிண்டு இருக்கோம். நம்ம பொண்ணுங்களுக்கு நாம சொல்லிக் கொடுப்பதற்கே நேரம் பத்த மாட்டேங்குது -கல்யாணம் ஆகப் போற பொண்ணுங்க, கல்யாணம் ஆகி மாமியார் வீட்டில் குடும்பம் நடத்தும் பொண்ணுங்க -தனியாக கணவரோடு குடும்பம் நடத்தும் பெண்கள், எல்லோருக்கும் இந்த டிப்ஸ் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் . ஸ்நானம் செய்யும் முறை வழக்கம்போல எப்பொழுதுமே லேட்டாகத்தான் எழுந்திடுவோம் வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்து ஸ்நானம் செய்யற பழக்கத

வெளியூரில் வேலை பார்க்கும் அனைவருக்கும் இந்த தீபாவளி தித்திக்கும் தீபாவளி

Image
தித்திக்கும் தீபாவளி குடும்பத்தில் ஒரு அங்கமாக அனைவரின் மனதிலும் நான் நிறைந்து- அனைவரையும் என் உயிருக்குள் பூட்டிவைத்து- குடும்ப பாரத்தை நான் சுமந்து - பட்ட கடனை அடைப்பதற்கு அல்லது இனி துன்பம் இல்லாமல் வாழ்வதற்கு - பணத்தின் அவசியத்தை புரிந்து கொண்டு அவர்களுக்காக நான் சிரமம் கொண்டாலும் நம் கடமையை இனிதே செய்கிறேன் -என நிறைவு கொண்டு எப்போது நம் குடும்பத்தை பார்ப்போம் எனும் ஏக்கத்தை மறைத்துக்கொண்டு போனில் அவர்களுக்கு தைரியம் கொடுத்து மகிழ்ச்சியோடு பேசுவது போல் நடித்து விட்டு -பின்னால் வழிகின்ற கண்ணீரை துடைத்துக் கொண்டு - தியாக நெஞ்சம் கொண்ட  மண்ணின்  பூவாசங்கள்  தென்னிந்தியாவில் மிக அதிகம்.  வெளியூரிலே வாழ்கின்ற அனைவருக்கும் இனிய செய்தி.. வருகின்ற 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி . அதற்கு முன்பாக 8 சிறப்பு ரயில்கள் அல்லது அதற்கும் மேலாக சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம் என சென்ட்ரல் ரயில் நிலையம் முடிவெடுத்துள்ளது என ரயில்வே அதிகாரி கூறுகின்றார் .பின்னர் முறையான அறிவிப்பு சொல்லப்படும். தீபாவளி கொண்டாடுவதற்கு தங்களது ஊருக்கு செல்ல விரும்புவோர் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய

நவீன கால காக்கைகள் -கனிய போகும் மழலைகள்-ஆரோக்கியமான உணவு டிப்ஸ்

Image
 இரவு தனிலே ஒரு கை சாதம் எடுத்து நீர் ஊற்றி மறுநாள் விடியலில் அந்த சாதத்தை காக்கைக்கு வைத்தால் நம்முடைய வாழ்நாள் முழுவதும் பொருட்செல்வம் பெருகிக்கொண்டே இருக்குமே தவிர ஒரு பொழுதும் குறையாது -என பெரியவர்கள் சொல்லக் கேட்டு அதேபோன்று நீர் ஊற்றிய பழஞ்சோறு தனில் ஒரு கைப்பிடி எடுத்து மறுநாள் விடியலில் சாதம் கொண்டுசென்று நான் வைக்க அடுத்த நிமிடமே தன் சகாக்களை அழைத்துக்கொண்டு ஓடி வந்த காக்கை கூட்டமோ -உண்ணும் அழகை கண்டு ரசிப்பதற்கு நானோ காத்துக்கொண்டிருக்க "பழம் சாதம் பிடிக்கவில்லையாம் காக்கைக்கு எங்களைப்போல் பீட்சா -கட்லெட் பர்க்கர் வைத்தால்தான் சாப்பிடும் என்றாள்- எங்கள் வீட்டு சுட்டிப்பெண். உண்மைதான் வைத்த சாதம் அப்படியே இருக்கின்றது ..பக்கத்து வீட்டிலோ இரவு மீதமென வைத்த பர்கருக்கு மவுசு மிக மிக அதிகமே அனைத்து காகமும் அவ்விடத்திலே ..அதிலே ஒரு காகமோ‌ எமை பார்த்து முறைப்பது ஏனோ! பழம் சாதமா வைக்கின்றாய்! அமாவாசை அன்று கூப்பிடுவாய்.. அன்று காட்டுகின்றேன் என் வேலையை..' என்று பர்கரை சுவைத்துக்கொண்டே எமைப் பார்த்து முறைக்க.. சகாக்கள் அனைத்தும் ஒருசேர தலையாட்ட -இது என்ன வம்பாப் போச