Posts

Showing posts from September, 2019

ஆபரண விலை தங்கம் விலை உயர்வு

Image
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 1கிராம் 3579 ரூபாய் அளவில் தற்போதைய நிலவரம் சவரனுக்கு ரூபாய் 28,632 விற்கப்படுகின்றது. ஆனாலும் பெண்கள் மிகவும் விரும்பி அணிகலனை   வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். உடலை அலங்கரிக்க ஆபரணம் விரும்பாத பெண்கள் ஏது! காதுக்கு இனிய கம்மலோ ஜொலி ஜொலிக்க -மூக்குத்தி  மின் மின்னலென பளபளக்க - கழுத்திலே கலர்கலராக நெக்லஸ்  கண்கவர- பதக்கங்கள் பலவிதமாய் மார்பினிலே ஊஞ்சலாட- வண்ண வண்ண தங்க வளையல்களோ சலசலக்க -கண்ணாடி முன் நின்று தன் அழகில் மதிமயங்கி நின்றுவிட்டால் -வேலை என்பதேது! செய்வதுதான் ஏது!  ஆடவரின்  பாக்கெட்டை காலி செய்து செய்வது ஆபரணத்தின் வேலை அன்றோ! இருந்தாலும் கட்டிய மனைவி சிரித்துவிட்டால்  மயங்காத கணவர்தான் ஏது! செலவை நினைத்து கவலைப்பட்டால் வாழ்வதேது! என அறிந்து தான் எந்த விலையில் நான் ஜொலித்தாலும்  எம்மை நாடி வந்துதானே ஆகவேண்டும் -என்று கம்பீரமாக சர்வதேச அளவில் ட்ரெண்டிங்காக ஆபரணத்தின் விலை உச்சகட்டத்தில் இருக்கின்றது. அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகம் ரூபாய் மதிப்பு சரிவு சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு -அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் கடந்

19-9-2019 வியாழக்கிழமை கிருத்திகை விரதம்

Image
கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த தினம் என்பதால் இன்றைய பொழுதை முருகனை வழிபட்டு வாழ்க்கையில் சிறப்பு அடைய வேண்டும்.கார்த்திகை தீபத்திலே அழகு முருகன் அவன் -சிரிக்கின்றான் தாமரை மலரில் பூத்த மோகன முகத்தவன்- மிளிர்கின்றான் உமையவளின் மடியிலே தவழ்கின்ற மழலையாக -மலர்கின்றான் ஈசன் பெற்ற ஆசை மைந்தன் அவன் -இனிக்கின்றான். குன்று இருக்கும் இடத்திலே குடிகொண்ட  குருபரன் அருள்கின்றான். நம் அனைவரும் அவன் புகழ் பாடும் தருணமே கார்த்திகை சிறப்புமிக்க இந்த நன்னாளில் இரண்டு மணி நேரம் மனம் முழுதும் இறைவனை நினைத்து மவுனமாக இருந்து வழிபட்டால் விரதம் அடைந்த பலன் கிடைக்கும். மௌனம் கடைபிடித்தால் சிறப்புகள்.. சிறப்பு-1  மனதில் மிகப் பெரிய பலம் கிடைக்கும். ‌ சிறப்பு-2 ‌ மனதிற்கு தெளிவு தரும் சிறப்பு-3 ‌ உடல் பிணி அகலும் சிறப்பு -4 ‌ புதிய தெம்பு பிறக்கும் சிறப்பு -5 ‌துன்பத்திற்கு தீர்வு கிடைக்கும் சிறப்பு -6 ‌ வாழ்வதற்கான வழி பிறக்கும் முருகனின் கோவில் தனில் நான் சென்று- நின்முகம் நான் கண்டு -நின் பாதம் நான் பணிந்து -கோவிலை வலம் வந்து -மௌனமாய் நான் அமர்ந்து -கண்களை மூடுகின்றேன் -முர

உலக கோப்பை வென்ற இலங்கை தமிழ் பெண்கள்

Image
நம் உணர்விலே -உயிரிலே கலந்து ஆத்மாவோடு ஐக்கியமாகி சுவாசிக்கின்ற மூச்சு காற்றினிலே தமிழின் வாசம் நுகர்ந்து -ஆனந்த பரவசம் அடையும் மொழி இனிய தமிழ் மொழியன்றோ! அதனால்தான் தமிழர்கள் எந்த நாட்டில் எங்கு இருந்தாலும் அவர்கள் பெயரும் புகழும் அடைகையில் நாம் ஆனந்தம் அடைகிறோம். அந்த ஆனந்தத்தோடு நாம் இங்கு கண்டு மனம் மகிழ்வது .. பிரான்சில் நடைபெற்ற சர்வதேச அழகு கலை  முக ஒப்பனை போட்டியில் மூன்று இலங்கை தமிழ் பெண்கள் உலகக் கோப்பையை தட்டிச் சென்றுள்ளனர் பிரான்ஸ் நாட்டில் உலக அளவிலான முக அழகு  ஒப்பனை போட்டி நடைபெற்றது .உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அழகு கலை நிபுணர்கள் பங்கேற்றனர் .இலங்கை சார்பாக போட்டியிட்ட கொழும்பை சேர்ந்த கயல்விழி -மாத்தறையை சேர்ந்த மையூரி -தீக்க்ஷினி என இலங்கை தமிழ் பெண்களும் கலந்து கொண்டனர்.  இந்த மூவருமே போட்டியில் வெற்றி பெற்று உலக கோப்பையை தட்டிச் சென்றனர். ஆண்டவன் கொடுத்த அறிவை அடக்கி வைப்பது தவறன்றோ! குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது என்று இராது -பெண்கள் படைக்கும் சாதனை என்பது உலக அளவில் மேலோங்கி நிற்பது பெருமை தரக்கூடிய விஷயமே -வாழ்க்கையில் ஏதாவது ஒரு கலையை

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

Image
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா- உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா !பெண் முன்னேற்றம எல்லாம் வெறும் பேச்சோடுதானா.. பழம் பாட்டோடுதானா வெறும் ஏட்டோடுதானா ! என பெருமூச்சோடு புலம்பி கொண்டிருக்கும் பெண்களின் மத்தியில் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அரசியல் ட்ரென்டாக  இப்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார். பாஜக கட்சிக்காக  தான் உழைத்த உழைப்புக்கு எல்லாம் கைமேல் பலன் கிடைத்துள்ளது .தெலுங்கானா கவர்னராக எட்டாம் தேதி பதவி ஏற்கின்றார் திருமதி தமிழிசை சௌந்தரராஜன்.  பாஜக தலைவராக கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இருந்து வருகின்றார் .அன்றுமுதல் முழுமூச்சாக பாஜாக கட்சிக்காக அரசியலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார் . கட்சி விட்டு கட்சி தாவுவது என்பது அரசியலின் வழக்கம்  என்றாலும் அனைத்திற்கும் விதிவிலக்காக இருந்தவர்தான் தமிழிசை சௌந்தரராஜன். பரிகாசம் பாராட்டுதல் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் பாஜகவின் கட்சிக்காக அனைத்தையும் சமாளித்து இன்று கவர்னர் எனும் அங்கீகாரத்தை பெறுகின்றார். என்பது மகிழ்ச்சி கொள்ள வேண்டிய ஒரு விஷயம்தான். மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி ஒரு அறிக்கைய