Posts

தனுஷ் பிறந்தநாள்

Image
 நடிகர் தனுஷ் அவர்களுக்கு பிறந்தநாள் இன்று  28 ஜூலை மாதம்1983  சிறு துளியாக பிறந்து பெரு துளியாக திரையுலகில் இன்று சாதனை புரிந்து வரும் ‌நடிகர் தனுஷ் அவர்களை ' என்றும் வாழ்க வளமுடன் 'என்று வாழ்த்துவோம். 'தோன்றின் புகழோடு தோன்றுக' சொல்லுக்கு பொருத்தமானவர் தனுஷ்.   மனிதனாய் பிறந்து  திரையுலகில் சாதித்து, சோதனை வந்தாலும் தகர்த்தெறிந்து, விடாது முயற்சி செய்து, புகழ் பெற்று வாழ்தலின் இன்பம் கண்டவர் தனுஷ். திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குனர் ,என தன்னுடைய ‌ சகலகலா முத்திரையை திரை உலகில் மிக அழகாக பதித்தவர் நடிகர் தனுஷ்.  நடிப்புத் திறமையால்  ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் மட்டுமன்றி ராஞ்சனா எனும் இந்தி படத்திலும் நடித்து புகழ் பெற்றவர். நடிகர் ரஜினி லதா தம்பதியரின் மகள் ஐஸ்வர்யா மணந்து மணவாழ்க்கையில் மகிழ்ச்சி கண்டவர். யாத்ரா , லிங்கா  இரு பிள்ளைகள் என  பாசப்பிணைப்பு மிக்க  மிக அழகிய குடும்பத்தின் தலைவனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். பல சர்வதேச விருதுகளை மட்டுமன்றி சினிமா துறையில்...

மழலை சொல் கேளீரோ

Image
புதிய ஜனனம் சூரியோதயம் பிறந்தது - விடியல் பிறந்தது மலர்மலர்ந்ததோ  -புதிதாக எனை காண  - குரல்கள் சுற்றிலும் சூழ புதிதாக ஜனனம் எடுத்தேனோ! கீச்சென்ற என் குரல் பூமிதனில் ஒலிக்கையிலே - உலகம் எனக்காகவே இப்போதுதான் பிறந்ததோ!  என் வரவை எதிர்பார்த்து அனைவரும் ஆனந்தமாய் வரவேற்க -யான் என்ன தவம் செய்தேனோ !குதூகலம் என்னுள் பொங்கிடவே பிஞ்சு கைகள் கால்களும் சிலம்பாட - கீச்சென்று நானோ குரல் எழுப்ப அணைத்த கைகள் தாயின் கைகள் அன்றோ! இதமான சூடு -இன்பமான அரவணைப்புக்குள்  நான் சிக்குண்டேன் சிக்குண்டேன் என் தாயே -என்ன தவம் செய்தேனோ! உன் வயிற்றில் மழலை என உதித்ததற்கு  நன்றி சொன்னேன் இறைவனுக்கு காலமெல்லாம்.. இந்த அன்பும் அரவணைப்பும் என்னுள் என்றென்றும் வேண்டும் என் தாயே - என்னுள் நீயும் உன்னுள் நானும் என இனிதே கலந்துவிட்டேன் என் தாயே!  என்னையே அறியாத வருடுகின்றேன் என் தாயின் கன்னத்திலே ..இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ!  Copy rights at balakshitha

15 11 2019 வெள்ளிக்கிழமை இந்த வாரத்திற்கான விசேஷமான தினங்கள்

Image
15-112019 வெள்ளிக்கிழமை  சங்கடகர சதுர்த்தி  விநாயகப் பெருமானுக்கு உகந்த தினம் . எந்த காரியத்தை தொடங்கினாலும் விநாயகரை வணங்கி தொடங்கில் ஜெயமாகும் .யானை முகத்தவனை நம்பினால் ஒரு குறையும் வராது என்று நம்பிக்கையோடு சங்கடகர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வழிபடலாம் திருமண தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும்.  அன்றைய தினம் அருகம்புல் மாலையை விநாயகருக்கு சாற்றினால் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி மிகுந்த இனிய வாழ்க்கை தருவார் விநாயகப்பெருமான்.   17-11-2019 ஞாயிற்றுக்கிழமை தமிழ் மாதமான கார்த்திகை ஒன்றாம் தேதி -கார்த்திகை மாதத்திற்கு உள்ள சிறப்பு -இந்த மாதம் திருமணம் கைகூடும் மாதம் என்பதால் ஆவலோடு எதிர்பார்க்கும் அனைவருக்கும் நல்ல வரன் தேடி வரும் சிறப்பான மாதம்.  கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை சித்தயோகம் 60 நாழிகை பஞ்சமி திதி யோடு சுப நாளும் சேர்ந்து வருவதால் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் நவகிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தும் விலகி -சுப செய்திகள் தேடிவரும்.  18-11-2019 திங்கட்கிழமை அன்று சோமவாரம்- கார...

8-11-2019 இந்த வாரத்திற்கான விரத தினங்கள்

Image
8--11 -2019 வெள்ளிக்கிழமை முதல் இந்த வாரம் முழுவதும் வரக்கூடிய விசேஷ தினங்கள்.. 9-11-2019 சனிக்கிழமைஅன்று சனி பிரதோஷம் 12-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று பௌர்ணமி 13-112019 புதன்கிழமை அன்று கிருத்திகை  நவம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை -சனி பிரதோஷம் சிவனுக்கான வழிபாடு -ஓம் சிவாய நமஹ எனும் மந்திரத்தை நாள்முழுதும் சொல்லியபடி விரதம் இருக்கக் கூடிய அற்புதமான தினம் சனிப்பிரதோஷம் .சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷம் மிக மிக சக்திவாய்ந்த பிரதோஷம் ஆகும். அன்றைய தினத்தில் ஓம் சிவாய நமஹ எனும் நாமத்தை உச்சரிப்பது  சிவபெருமானின் அபிஷேகத்திற்கு நம்மால் முடிந்த பால்- இளநீர் -தேன் கரும்புச்சாறு- சந்தனம் என வாங்கி கொடுக்கலாம் . அர்ச்சனைக்கு வில்வ இலை வாங்கி கொடுப்பது -நெய் விளக்கு ஏற்றுவது அருகம்புல் மாலை வில்வ மாலை நந்தீஸ்வரருக்கு சாற்றுவது -பச்சரிசி வெல்லம் கலந்த இனிப்பு அனைவருக்கும் கொடுப்பது- இவை நாம் அன்றையதினம் செய்யக்கூடிய செயல்கள் . அன்றைய தினத்தில் கோவிலுக்கு அவசியம் சென்று நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கிடையே சிவலிங்கத்தை தரிசிப்பது - மூன்று ஜென்ம பாவம் தீரும்.  நம்முடைய மனத...

நாட் கிழமைகளில் வெள்ளிக்கிழமைகளில் நாம் நடந்துகொள்ளும் வேண்டிய வழிமுறைகள்

Image
வெள்ளிகிழமைகளி நடந்துகொள்ளும் வழிமுறைகள்.. வெள்ளிக்கிழமை தெய்வத்திற்கு உகந்த நாள் இந்த நாளில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் .அந்த காலத்துல பாட்டி நமக்கு நிறைய அட்வைஸ் பண்ணுவாங்க.. நாள் கிழமை வந்தால் வாசலில் தலை முடியை பறக்க விட்டுண்டு  நிக்காதே.. மணி 5 ஆகப் போகுது முகத்தை அலம்பிண்டு பொட்டு வச்சுண்டு   முதல்ல போய் விளக்கேத்து.. அழகா லட்சணமா இருக்கே- தலையில கொஞ்சம் பூ வச்சுண்டு  வேலைய பாரு -என நிறைய அட்வைஸ் பண்ணுவாங்க நாமும் பாட்டி சொல்வதை கேட்டு அதன்படி நடப்போம் .. ஆனா இப்போ நாம எல்லோரும் வேலைக்கு போறோம் .கையில் செல்போன் இருந்தா நேரம் போறதே தெரியாம பேசிண்டு இருக்கோம். நம்ம பொண்ணுங்களுக்கு நாம சொல்லிக் கொடுப்பதற்கே நேரம் பத்த மாட்டேங்குது -கல்யாணம் ஆகப் போற பொண்ணுங்க, கல்யாணம் ஆகி மாமியார் வீட்டில் குடும்பம் நடத்தும் பொண்ணுங்க -தனியாக கணவரோடு குடும்பம் நடத்தும் பெண்கள், எல்லோருக்கும் இந்த டிப்ஸ் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் . ஸ்நானம் செய்யும் முறை வழக்கம்போல எப்பொழுதுமே லேட்டாகத்தான் எழுந்திடுவோம் வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்து ஸ்...

வெளியூரில் வேலை பார்க்கும் அனைவருக்கும் இந்த தீபாவளி தித்திக்கும் தீபாவளி

Image
தித்திக்கும் தீபாவளி குடும்பத்தில் ஒரு அங்கமாக அனைவரின் மனதிலும் நான் நிறைந்து- அனைவரையும் என் உயிருக்குள் பூட்டிவைத்து- குடும்ப பாரத்தை நான் சுமந்து - பட்ட கடனை அடைப்பதற்கு அல்லது இனி துன்பம் இல்லாமல் வாழ்வதற்கு - பணத்தின் அவசியத்தை புரிந்து கொண்டு அவர்களுக்காக நான் சிரமம் கொண்டாலும் நம் கடமையை இனிதே செய்கிறேன் -என நிறைவு கொண்டு எப்போது நம் குடும்பத்தை பார்ப்போம் எனும் ஏக்கத்தை மறைத்துக்கொண்டு போனில் அவர்களுக்கு தைரியம் கொடுத்து மகிழ்ச்சியோடு பேசுவது போல் நடித்து விட்டு -பின்னால் வழிகின்ற கண்ணீரை துடைத்துக் கொண்டு - தியாக நெஞ்சம் கொண்ட  மண்ணின்  பூவாசங்கள்  தென்னிந்தியாவில் மிக அதிகம்.  வெளியூரிலே வாழ்கின்ற அனைவருக்கும் இனிய செய்தி.. வருகின்ற 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி . அதற்கு முன்பாக 8 சிறப்பு ரயில்கள் அல்லது அதற்கும் மேலாக சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம் என சென்ட்ரல் ரயில் நிலையம் முடிவெடுத்துள்ளது என ரயில்வே அதிகாரி கூறுகின்றார் .பின்னர் முறையான அறிவிப்பு சொல்லப்படும். தீபாவளி கொண்டாடுவதற்கு தங்களது ஊருக்கு செல்ல விரும்புவோர் முன்கூட்டியே...

நவீன கால காக்கைகள் -கனிய போகும் மழலைகள்-ஆரோக்கியமான உணவு டிப்ஸ்

Image
 இரவு தனிலே ஒரு கை சாதம் எடுத்து நீர் ஊற்றி மறுநாள் விடியலில் அந்த சாதத்தை காக்கைக்கு வைத்தால் நம்முடைய வாழ்நாள் முழுவதும் பொருட்செல்வம் பெருகிக்கொண்டே இருக்குமே தவிர ஒரு பொழுதும் குறையாது -என பெரியவர்கள் சொல்லக் கேட்டு அதேபோன்று நீர் ஊற்றிய பழஞ்சோறு தனில் ஒரு கைப்பிடி எடுத்து மறுநாள் விடியலில் சாதம் கொண்டுசென்று நான் வைக்க அடுத்த நிமிடமே தன் சகாக்களை அழைத்துக்கொண்டு ஓடி வந்த காக்கை கூட்டமோ -உண்ணும் அழகை கண்டு ரசிப்பதற்கு நானோ காத்துக்கொண்டிருக்க "பழம் சாதம் பிடிக்கவில்லையாம் காக்கைக்கு எங்களைப்போல் பீட்சா -கட்லெட் பர்க்கர் வைத்தால்தான் சாப்பிடும் என்றாள்- எங்கள் வீட்டு சுட்டிப்பெண். உண்மைதான் வைத்த சாதம் அப்படியே இருக்கின்றது ..பக்கத்து வீட்டிலோ இரவு மீதமென வைத்த பர்கருக்கு மவுசு மிக மிக அதிகமே அனைத்து காகமும் அவ்விடத்திலே ..அதிலே ஒரு காகமோ‌ எமை பார்த்து முறைப்பது ஏனோ! பழம் சாதமா வைக்கின்றாய்! அமாவாசை அன்று கூப்பிடுவாய்.. அன்று காட்டுகின்றேன் என் வேலையை..' என்று பர்கரை சுவைத்துக்கொண்டே எமைப் பார்த்து முறைக்க.. சகாக்கள் அனைத்தும் ஒருசேர தலையாட்ட -இது என்ன வம்பாப் போச...